உள்நாட்டு செய்திகள்

பிறந்து 20 நாட்களேயான குழந்தைக்கு கொரோனா! பரிதாபமாக உயிரிழந்த சோகம்

கொழும்பில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்ட 20 நாட்களேயான ஆண் குழந்தை இன்று மாலை உயிரிழந்துள்ளது என வைத்தியர் விஜேசூரிய கூறியுள்ளார். இன்று அதிகாலை 4.00 மணியளவில் கடுமையான நிமோனியா காய்ச்சல் காரணமாக குழந்தையை பெற்றோர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இதையடுத்து குழந்தை இன்று மாலை உயிரிழந்துள்ளது. பின்னர் குழந்தைக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்த நிலையில் கொரோனா தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டது. எனினும் குழந்தையின் மரணத்திற்கு நேரடி காரணம் கொரோனா வைரஸ் தொற்று அல்ல என்றும், கடுமையான நிமோனியா காரணமாகவே இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் வைத்தியர் கூறினார். குழந்தை கொழும்பு – முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top