வத்தளை காகில்ஸ் புட் சிட்டி பல்பொருள் அங்காடி நிலையத்தில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த இருவர், காசாளரிடம் துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தும் காணொளி CCTVயில் பதிவாகியுள்ளது. CCTV காணொளியின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, வத்தளை சம்பவத்தில் தமது ஊழியர்களுக்கோ அல்லது நுகர்வோருக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என காகில்ஸ் புட் சிட்டி நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
