உலகம்

புதிய பாராளுமன்ற கட்டிடம்- மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் அதிருப்தி

பாராளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டும் பணிக்கு பிரதமர் மோடி வரும் 10ம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், பாராளுமன்ற கட்டிடம் தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பாராளுமன்ற கட்டிடம் தொடர்பாக ஆட்சேபம் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிபதிகள், வழக்கு நிலுவையில் இருக்கும்போது புதிய பாராளுமன்ற கட்டிடம் அமைக்கும் மத்திய அரசின் நடவடிக்கை தொடர்பாக தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். பாராளுமன்ற கட்டிடம் குறித்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது கட்டுமானங்களை எப்படி தொடங்குகிறீர்கள்? கட்டுமானங்கள் நடக்கவில்லை என்பதை சொலிசிட்டர் ஜெனரல் உறுதிப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top