ஆன்மீகம்

புனித ஹஜ் கடமைக்கான அனுமதி தொடர்பில் சவுதி அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு

2020 இந்த ஆண்டு குறைந்த எண்ணிக்கையுடன் ஹஜ் நடைபெறும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கையில், வெளிநாடுகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள், மெக்காவில் வந்து ஹஜ் செய்ய தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளது. ஹஜ் பயணத்தின் போது, வயதானவர்களுக்கு தடை மற்றும் கூடுதல் சுகாதார சோதனைகள் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறி உள்ளது. சவுதி அரேபியாவில் மட்டும் வசிப்பவர்கள், ஹஜ் செய்ய தயாராக உள்ளதாகவும் அந் நாட்டு அரசு விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில், கொரோனா வைரஸ் தாக்குதலால் இது வரை ஆயிரத்து 307 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top