உலகம்

புறப்பட்ட சில நிமிடங்களில் 50 பயணிகளுடன் சற்று முன் மாயமான விமானம் – தேடுதல் தொடர்கிறது

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று ரேடாரில் இருந்து மறைந்து, விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடாரில் இருந்து விமானம் மறைந்ததாகவும், தரைக்கட்டுப்பாட்டு நிலைய தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. காணாமல் போன விமானம் ஸ்ரீவிஜயா ஏர் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-500 என்ற ரகத்தை சேர்ந்தது. உள்நாட்டிற்குள்ளேயே ஒரு நகரத்திலிருந்து, மற்றொரு நகரத்துக்கு இந்த விமானம் பயணம் செய்ததாகவும் தகவல் தெரியவந்திருக்கிறது. தற்போது மாயமாகியுள்ள பயணிகள் விமானத்தை தேடும் பணியில் அரசும், அதிகாரிகளும் இறங்கியுள்ளனர். அந்த விமானத்தில் 50க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top