உலகம்

புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – கின்னஸ் சாதனை

இந்தியாவில் உள்ள புலிகளைக் கணக்கெடுத்த விதம் கின்னஸ் சாதனையைத் தட்டிச் சென்றுள்ளது. இந்தியாவில் 2018-19 ஆண்டில் கேமிராக்களை கொண்டு புலிகள் இருப்பை கணக்கெடுத்தன மூலம் இந்தியா இந்த சாதனையைப் பெற்றுள்ளது. 2018-2019ம் அண்டுக்கான புலிகள் கணக்கெடுப்பு கேமிராக்களை கொண்டு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பு விரிவாக நடத்தப்பட்டது. கேமிராக்களை கொண்டு புலிகளின் அசைவுகள் பதிவு செய்யப்பட்டு இந்த கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டது. இதற்கிடையே மத்திய அரசு புலிகள் எண்ணிக்கையை இரு மடங்கு அதிகரிக்க வேண்டுமென மத்திய அரசு தீர்மானம் நிறைவேற்றி, அதற்கு 2022ம் ஆண்டை இலக்காக நிர்ணயித்திருந்தது. 2018-2019 கணக்கெடுப்பின்படி 2 ஆயிரத்து 967 புலிகள் இந்தியாவில் உள்ளது. இந்த சாதனை குறித்து கின்னஸ் அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது இந்தியாவில் 2018-2019 நடந்த 4வது சுற்றுப் புலிகள் கணக்கெடுப்பு தரவுகளின்படி மிக விரிவான கணக்கெடுப்பாக இருந்தது. சுமார் 141 பகுதிகளில் 26 ஆயிரத்து 838 இடங்களில் கேமிராக்கள் பொருத்தப்பட்டுக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 337 சதுர கிலோமீட்டர் கண்காணிக்கப்பட்டுள்ளது. பொருத்தப்பட்ட கேமிராக்கள் மூலம் 3 கோடியே 48 லட்சத்து 58 ஆயிரத்து உயிரினங்களில் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 76 ஆயிரத்து 651 புகைப்படங்கள் புலிகள் சம்பந்தப்பட்டவை. 51 ஆயிரத்து 777 புகைப்படங்கள் சிறுத்தை தொடர்பானவை. பிற புகைப்படங்கள் உள்ளூர் உயிரினங்களின் படங்கள். பதிவு செய்யப்பட்ட புலிகள் தொடர்பான படங்களில் அங்கீகரிப்பு மென்பொருள் மூலம் 2 ஆயிரத்து 461 புலிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த கணக்கெடுப்பை நடத்த சுமார் 6 லட்சத்து 20 ஆயிரத்து 795 வேலைநாட்கள் செலவிடப்பட்டிருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

புராஜெக்ட் டைகர் எனப் புலிகளைப் பாதுகாக்கும் திட்டம் தொடங்கப்பட்டபோது 9 புலிகள் பாதுகாப்பகங்கள் இருந்தன. இப்போது அது 50 ஆக உயர்ந்துள்ளது. புலிகள் கணக்கெடுப்பு என்பது 4 ஆண்டுக்கு ஒரு முறை மத்திய அரசால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை. அதன் படி, இப்போது சுமார் 3 ஆயிரம் புலிகள் வரை இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அடுத்த கணக்கெடுப்பு 2022ம் ஆண்டு நடத்தப்படும். இந்த கின்னஸ் சாதனை என்பது மிக அற்புதமான தருணம் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், “பிரதமர் மோடியைப் போல் கூற வேண்டுமென்றால், உறுதிப்பாட்டின் மூலம் சாதித்தல் என்ற சுயச்சார்பு இந்தியாவுக்கான இரு அருமையான உதாரணம் இது” எனக் கூறியுள்ளார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top