உள்நாட்டு செய்திகள்

பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிரதேச சபை உறுப்பினர் கைது

பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டு ஜனவரி 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். யக்கலமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானியாதெனிய படகெட்டிய பகுதியில் 27 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் நேற்று மாலை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் விதவை எனவும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிரதேச சபை உறுப்பினர் அவருடைய உறவினர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top