உள்நாட்டு செய்திகள்

பெரும்பான்மை பலமுள்ள அரசாங்கமே எமக்கான தீர்வினைத் தரமுடியும் : இரா.சாணக்கியன்

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தினை கொண்டுள்ள தற்போதைய அரசாங்கத்தினால் மாத்திரமே எமக்கான தீர்வினை வழங்க முடியுமென மட்டக்களப்பு
மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் இன்று ஆசிரியர்களுக்கான விளையாட்டு சீருடைகளை வழங்கி வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,


“கடந்த காலங்களைப் போன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லை என்று கூறி சர்வதேசத்தினை ஏமாற்ற முடியாது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தினை கொண்டுள்ள தற்போதைய அரசாங்கமே எமக்கான தீர்வினை வழங்க வேண்டும்.

நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளின் படி உரிமையுடன் கூடிய அபிவிருத்தி பணிகளை நிச்சயமாக செய்வோம். அதேபோன்று உரிமை இல்லாத அபிவிருத்தி நிலைக்காது என்பதனையும் மக்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள்.

தேர்தல் காலத்தில் பல்வேறு வாக்குறுதிகள் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டன. அவற்றை நிறைவேற்றுமாறு நீங்கள் தொடர்ச்சியாக அவர்களுக்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்.

எனினும் தற்போதைய அரசாங்கத்தினால் சர்வதேசத்திற்கு சாட்டுப்போக்குகளை கூறித் தப்பிக்கொள்ள முடியாது. தமிழர்களுக்கு தீர்வினை வழங்குவோம் வழங்க மாட்டோம் என இதில் ஏதாவது ஒன்றினை தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் இருக்கின்றது” என இரா.சாணக்கியன் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top