மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொறியியலாளர் ஞானப்பிரகாசம் அவர்களின் தேர்தல் பிரசாரத்தினை ஊக்குவிக்கும் முகமாக உத்தியோகபூர்வ பாடல் அவருடைய ஆதரவாளர்களால்இன்றைய தினம் அலுவலகத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கான ஆதரவினை சமூகவலைத்தளங்களில் பெரிதும் ஊக்குவிப்பதாக பலராலும் பார்வையிடப்பட்டு வரும் ஓர் பாடலாக இணையம் எங்கும் இப் பாடல் உலாவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
