உள்நாட்டு செய்திகள்

போக்குவரத்து சேவைகளில் பொதுமக்களின் நம்பிக்கை முக்கியமானது

போக்குவரத்து சேவைகளில் பொதுமக்களின் நம்பிக்கையினை மீட்டெடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன இதனை தெரித்துள்ளார். இதேவேளை நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் தனியார் பஸ் சேவையில் 50 வீதம் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்படுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக தனியார் பஸ்சேவை பொருளாதார நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே ஜனாதிபதியின் தலையீட்டுடன் அரசாங்கம் உடன்நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top