உள்நாட்டு செய்திகள்

மகாஜனாக் கல்லூரி மாணவிகள் இருவருக்கு கொரோனா தொற்று!

யாழ் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மாணவிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருதனார்மடம் சந்தையுடன் தொடர்பில் இருந்த நிலையில் இவர்களின் பெற்றோருக்கும் நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் 80 பேர் மற்றும் ஆசிரியர்கள் இரு வாரங்களுக்கு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சங்கானை சந்தை வர்த்தகர்கள் 100 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதன்படி சங்கானையில் 4 பேருக்கும் உடுவில், பண்டத்தரிப்பு, மானிப்பாய் மற்றும் வடலியடைப்பு பகுதியைச் சேர்ந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top