உள்நாட்டு செய்திகள்

மட்டக்களப்பில் இரண்டு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து இன்று காலை குடும்ப பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் சடலம் களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலய வீதியிலுள்ள அவரது வீட்டிலிருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 34 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயான பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் உயிரிழந்த பெண்ணின் கணவர் பொலிசாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top