உள்நாட்டு செய்திகள்

மட்டக்களப்பில் தாதிய உத்தியோகத்தர் மீது துப்பாக்கிசூடு – படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு நகரில் நேற்று இரவு தாதியர் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு பறவைகளை சுடும் துப்பாக்கி மூலம் குறித்த தாதிய உத்தியோகத்தர் மீது துப்பாக்கிசூடு நடாத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். இதன் போது படுகாயமடைந்த தாதிய உத்தியோகத்தர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டில் பூம்புகார்,கண்ணகியம்மன் வீதியை சேர்ந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தலைமை தாதிய உத்தியோகத்தராக கடமையாற்றும் தாதி உத்தியோகத்தரே படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top