உள்நாட்டு செய்திகள்

மட்டக்களப்பில் மேலும் நால்வருக்கு கொரோனா – தொற்றாளர்கள் 54ஆக அதிகரிப்பு -மக்களுக்கு விடுக்கப்படும் அறிவுறுத்தல்

மட்டக்களப்பு நகரில் இன்றைய தினம் காலை வேளையில் இனங்காணப்பட்ட  கொரோனா தொற்றாளருடைய மூன்று குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு லொயிட்ஸ் வீதியில் இன்று வெள்ளிக்கிழமை ஒருவருக்கு  கொரோனா தொற்று இனங்காணப்பட்டது. இவர் செங்கலடியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கடமையாற்றிவரும் நிலையில் எதேச்சையாக மேற்கொள்ளப்பட்ட  PCR பரிசோதனையின் மூலம் இவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டது. இந்த அடிப்படையில் இன்று காலை அவரை சுகாதார பிரிவினர் இன்று சிகிச்சைக்காக அழைத்துச்சென்ற அதேவேளை குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டு  PCR சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதன்போது குறித்த நபரின் மனைவி மற்றும் 16வயதுடைய மகள்,13வயதுடைய மகன் ஆகியோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதுடன் இன்னொரு மகனான 20வயதுடைய மகனுக்கு தொற்று ஏற்படவில்லையெனவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

இதேய வேளையில் சற்று முன்னர் மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களினுடைய எண்ணிக்கை 54ஆக அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதுடன் தேவையற்ற வகையில் வெளியில் செல்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top