நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலையினால் மத்திய மாகாணம் மற்றும் பதுளை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் அதிக எச்சரிக்கைக்குரிய மாவட்டங்கள் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இந்த பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து வீசும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் 11.30 முதல் நாளை முற்பகல் 11.30 வரை இந்த அறிக்கை செலுப்படியாகும் என திணைக்களம் தெரிவிக்கின்றது.
