உள்நாட்டு செய்திகள்

மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் 36 கொரோனா தொற்றாளர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் இன்று (10) வரை 36 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்கெனவே கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களது உறவினர்கள் 84 பேருக்கு, உலமா சபை கட்டிடத்தில் நேற்று (09) மாலை செய்யப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளர். ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றின் வேகம் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில், பிரதேச செயலகம், பிரதேச சபை, இராணுவத்தினர், பொலிஸார், வர்த்தக சங்கத்தினர் ஆகியோர் சுகாதார தரப்பினருடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top