உள்நாட்டு செய்திகள்

மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பகுதியில் ஒருவருக்கு கொரோனா!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரை, அம்பாறை மாவட்டத்தின் பாலமுனை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த தாதியரின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த ஏனையோரையும் தனிமைப்படுத்து நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் சம்மந்தப்பட்ட 481 பேருக்கு, நேற்று மாலை வரையில் மொத்தமாக தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top