உள்நாட்டு செய்திகள்

மட்டக்களப்பு, கொழும்பின் சில பொலிஸ் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட வாழைச்சேனை பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சுமார் 11 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ள நிலையிலேயே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கொழும்பில் மேலும் சில பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு மாளிகாவத்தை, வாழைத் தோட்டம், டாம் வீதி, ஆட்டுப்பட்டித் தெரு மற்றும் கரையோரப் பகுதி பொலிஸ் பிரிவு ஆகிய பகுதிகளுக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top