உள்நாட்டு செய்திகள்

மட்டக்களப்பு- பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற 17 வயது மாணவன் நீரில் மூழ்கி பலி!!

மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் இரு நண்பர்களுடன் நீராடச் சென்ற 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் கடலிர் நீரில் மூழ்கி  உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று (11) மாலையில் இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை செம்மன் ஓடையைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் சம்பவதினமான நேற்று (11) அவரது நண்பர்கள் இருவருடன் பாசிக்குடா கல்மலை கடல் பகுதியில் கடலில் நீராடச் சென்று நீராடிய நிலையில் கடல் கல்மலையில் சிக்கியே நீரில் மூழ்கிய நிலையில் உயிரிழந்தார்.

இதனையடுத்து சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் ஒப்படைக்க ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top