மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக மட்டக்களப்பு ,களுதாவளை பிரதேசத்தினை சேர்ந்தவரும் இலங்கை நிர்வாக சேவை விசேட தரத்தை சேர்ந்தவருமான தற்போதைய கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சின் செயலாளராக கடமையாற்றும் கே. கருணாகரன் நியமனம் பெற்றுள்ளார்.
இன்று பிற்பகல் அதற்கான நியமன கடிதத்தினை அவர் பெற்றுக்கொண்டார்.
இதேவேளை தற்போதைய அரச அதிபர் கலாமதி பத்மராஜா பொதுநிர்வாக மாகாண சபைகள் உள்ளுராட்சிஅமைச்சிற்கு உடனடியாக அமுலாகும் வரையில் இணைக்கப்பட்டுள்ளார்.
