உள்நாட்டு செய்திகள்

மட்டு. பெரியகல்லாறில் சிறிய தாயின் வீட்டில் இருந்த சிறுமியின் சடலம் மீட்பு – தாய் வெளிநாட்டில்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 11வயதுடைய சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பெரியகல்லாறு 02ம் குறிச்சி, நாவலர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே இந்த சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. சிறுமியின் தாயார் வெளிநாடு ஒன்றுக்கு சென்றுள்ள நிலையில் குறித்த சிறுமி சிறிய தாயின் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

உயிரிழந்த குறித்த சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top