உள்நாட்டு செய்திகள்

மட்.போதனா வைத்தியசாலையில் 21 பேருக்கு கொரோனா! பணிப்பாளர் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்களில் 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கணேசலிங்கம் கலாறஞ்சினி தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் தேவையின்றி வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும். கிளினிக் நோயாளர்கள் தபாலகங்கள் மற்றும் கிராமசேவகர் ஊடாக மருந்துகளை பெற்றுகொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

போதனா வைத்தியசாலையில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தியனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது, உகன ஆகிய ஆறு வலயங்கள் சிவப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் கொரோனா தொற்றுள்ள நோயாளிகள் அதிகரித்து காணப்படுகின்றது. இதுவரை 425 நோயாளர்கள் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களில் 80 பேர் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு 3 நபர்கள் உயிரிழந்துள்ளார்கள்.

இதுவரை வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர்களில் 21 நபர்களுக்கு தொற்று இனங்காணப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு தொற்று ஏற்படும் போது வைத்தியசாலையின் சேவையினை முன்னெடுப்பதற்கு ஆளணி பற்றாக்குறை எங்களுக்கு ஏற்படலாம் இதனை தவிர்ப்பதற்காக நோயாளியிலிருந்து ஊழியர்களுக்கும் ஊழியர்களிலிருந்து நோயாளியிலிக்கும் தொற்று பரவுதலை தடுப்பதற்காக உடன் அமுலுக்கு வரும் வகையில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஊழியர்கள் தகுந்த பாதுகாப்பு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி சேவைகளை தற்பொழுது செய்து கொண்டிருக்கிறார்கள் அதேவேளை தொற்றா நோய்களான இருதய நோய் சிறுநீரக நோய் புற்றுநோய் மற்றும் வயோதிபர் போன்றவர்களுக்கு அதி கூடிய பாதிப்புகளை ஏற்படுத்துவதால் வைத்தியசாலைக்கு கிளினிக் வருவதனை தவிர்த்து கிராம சேவகர் அல்லது தபால் மூலமாக உரிய மருந்துகளை பெற்றுக்கொள்ளமுடியும் அல்லது 065 313 3330 மற்றும் 065 313 3331 தொலைபேசி ஊடாக அழைப்பினை மேற்கொண்டும் மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும்.

வைத்தியசாலைக்கு அவசியம் ஏற்படும் போது மாத்திரம் நோயாளிகள் வருவதுடன் முடிந்தளவு அருகாமையில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள முடியும் அத்தோடு நோயாளிகளை பார்வையிடுவதற்கு ஒருவர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ளது இருந்த போதிலும் தற்போது உள்ள நிலைமை காரணமாக நோயாளிகளை பார்வையிடுவதற்கான நேரத்தை குறைத்துக் கொள்வது மிகச் சிறந்ததாகும்.

மேலும் நோயாளிக்கு உதவியாக வருபவர்கள் தேவை ஏற்படும் போது மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் எனினும் இவ்வாறான நிலைகளில் நாங்கள் பொதுமக்களுக்கோ நோயாளிகளுக்கோ அவசியமான சேவைகளை நாங்கள் வழங்கிக் கொண்டு வருகின்றோம் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக சுகாதார நடைமுறைகளை பேணி வைத்தியசாலையின் சேவையை முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top