உள்நாட்டு செய்திகள்

மணிவண்ணன் ஒட்டுக்குழுக்களுடன் நெருங்கிப் பழகுகிறார்- கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

மணிவண்ணனை கட்சியிலிருந்து நீக்கியமைக்கான காரணம் இப்போது அனைவருக்கும் அறிந்திருக்கும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபையில் இன்று காலை நடைபெற்ற மேயர் தெரிவுக்கான போட்டியில் வி. மணிவண்ணன் வெற்றிபெற்றிருந்தார். இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே கஜேந்திரகுமார் இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், நாங்கள் அன்று மணிவண்ணனை கட்சியிலிருந்து நீக்கிய போது மணிவண்ணனைப் பார்த்து பயந்துதான் இந்த முடிவு எடுத்ததாக அவர் உட்பட பலர் தெரிவித்திருந்தனர். அதற்கு நாங்கள் பதிலை மக்களிடம் தெரிவித்திருந்தோம், “மணிவண்ணன் கொள்கையோடு இல்லை. அவர் மற்றையவர்களுடைய நிகழ்ச்சி நிரலுக்குள் சென்றுவிட்டார். விசேடமாக இனத்தைக் காட்டிக்கொடுப்பவர்களுடன் ஒன்றுபட்டுவிட்டார்” என்பதை நாங்கள் மக்களுக்கு அறிவித்திருந்தோம். இவ்வாறான நிலையிலேயே அன்று அவரை கட்சியிலிருந்து நீக்கினோம் என்றார்.இதற்கு காலம் பதில் சொல்லும் என்று அன்று நாம் தெரிவித்திருந்தோம். இன்று மணிவண்ணனை டக்ளஸ் தேவாநந்தா கட்டியணைத்துக் கொண்டார். இது ஆச்சரியமிக்க விடயம் இல்லை. மேலும் டக்ளஸூடன் பேச்சு நடத்திய அனைவரும் எமது கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள். விரைவில் இதற்கான நடவடிக்கை வரும் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top