உள்நாட்டு செய்திகள்

மனசாட்சியே இல்லாத ஈனப்பிறவிகள் வாழும் நாடு தம்பி! இது! சங்காகாரவிற்கு ஆதரவாக வலுக்கும் குரல்கள்

இலங்கையிலேயே மிகப்பெரிய விளையாட்டு அரங்கம் கட்டுவதாக கூறி திருடப்போன தம்மை அவர் தடுத்து நிறுத்தி விட்டார். “திருடாதே” என்று சொன்னார். திருட்டுக்கும், மோசடிக்கும் அவர் எதிரி. ஆகவே திருடர்களாகிய தமக்கு அவர் எதிரி. ஆகவே அவரை அழித்திட வேண்டும். ஆகவே அவருக்கு எதிராக அவதூறு சொல்லி ஊடக தலைப்புகளை உருவாக்குவோம். மணிக் கணக்கில் கேள்வி கேட்டு மன அழுத்தங்களை உருவாக்குவோம். இப்படி சிந்தித்து, செயற்படும் மனசாட்சியே இல்லாத ஈனப்பிறவிகள் வாழும் நாடு இது, தம்பி…!
என தனது முகநூலில் பதிவிட்டு சங்கராகவுக்காக குரல் கொடுக்கிறார் முன்னாள் அமைச்சர் மனோ கணேஷன்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நேற்றைய தினம் விசேட விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்தார். 9 மணிக்கு விசாரணைப் பிரிவில் முன்னிலையான குமார் சங்கக்காரவிடம் 9 மணித்தியாலங்களுக்கு மேல் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு குமார் சங்கக்கார தலைமை தாங்கியிருந்தார். இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஷஷாங்க் மனோகர் இராஜினாமா செய்துள்ளார். இதற்கமைய, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உப தலைவர் இம்ரான் கவாஜா பதில் தலைவராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய தலைவர் தெரிவு நடைமுறை அடுத்த வாரம் சர்வதேச கிரிக்கெட் பேரவையால் அறிவிக்கப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேய வேளை, தாய் நாட்டிற்கு நற்பெயரையும் வெற்றியையும் பெற்றுக்கொடுத்த குமார் சங்கக்கார உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் சதி தோற்கடிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கிரிக்கெட் வீரர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாகவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top