உள்நாட்டு செய்திகள்

மயிலத்தமடுவில் கைதான பண்ணையாளர்களை விடுவிக்ககோரி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதியில் பண்ணையாளர் ஆறு பேர் தாக்கப்பட்டு விகாரையொன்றில் தடுத்துவைக்கப்பட்ட சம்பவத்தினை கண்டித்தும் கடத்தப்பட்ட பண்ணையாளரை விடுவிக்க நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தியும் இன்று கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று 10/01/2021 ஞாயிற்றுக்கிழமை சிந்தாண்டி சந்தியில் பண்ணையாளர்கள் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் தமிழ்தேசிய அரசியல் பிரமுகர்கள் இணைந்து கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தினர். இந்த போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியதேத்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.ஶ்ரீநேசன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இ.பிரசன்னா, வாலிபர் முன்ணணியின் தலைவர் கி.சேயோன், தமிழ் தேசிய மக்கள் முன்ணணி மட்டக்களப்பு தலைவர் த.சுரேஷ், பிரதேச சபை உறுப்பினர்களான குணசீலன், தேவன், மாமனிதர் ஜோசப்பர ராஜசிங்கம் அமைப்பின் தலைவி திருமதி கலைவாணி, மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் வே. தவராசா மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் மதகுருமார் என பலரும் கலந்து கொண்டன்னர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top