உள்நாட்டு செய்திகள்

மருதனார்மடம் கொத்தணியில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் சிலர் அடையாளம்!

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் மேலும் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 240 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், மருதனார்மடம் சந்தையில் தொற்றுக்குள்ளான வியாபாரிகளுடன் நேரடித் தொடர்புகளை பேணிய இருவருக்கே இன்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்வடைந்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சவால்களை முறையாக புரிந்து, மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். புதுவருடத்திற்கான அலுவல்களை ஆரம்பிக்கும் நோக்கில், அமைச்சர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற, சிறந்த எண்ணங்களுடனும், அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், சுபீட்சமான தொலைநோக்கு கொள்கையை செயற்திறனாகவும், சிறந்த முறையிலும் முன்னெடுத்துச் செல்ல, அனைத்து அரச சேவையாளர்களும் நேர்மையாக செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போதிலும், 15 இலட்ச அரச சேவையாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் ஆறு லட்சம் மக்களுக்கு, எந்தவித தடையுமின்றி சம்பளம் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மேலும் கூறியுள்ளார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top