அரசியல்

மருதமுனைக்கான பிரதிநிதியை வெல்ல சிறந்த சந்தர்ப்பம் – றிசாட் பதியுதீன்

மருதமுனை மக்கள் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தினால் பாராளுமன்ற அரசியல் அதிகாரத்தைப் பெற முடியுமென, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக மயில் சின்னத்தில் போட்டியிடும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவருமான வை.கே.ரகுமானை ஆதரித்து மருதமுனையில் நடந்த கூட்டத்தில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். மருதமுனை அல்-மனார் வீதியில் நடைபெற்ற (23) இடம்பெற்ற தேர்தல் பணிமனை திறப்பு நிகழ்வு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், மருதமுனை மக்கள் அயல் கிராமங்களில் உள்ள வேட்பாளர்களையே காலம் காலமாக பாராளுமன்றத்திற்கு அனுப்பி வருகின்றனர். எனினும் இப்பகுதியில் எந்த அபிவிருத்தியும் நடைபெறவில்லை இதனை இளைஞர்கள் முகப்புத்தகங்களில் எழுதிவருகின்றனர். இன்னிலையில் இந்த பாராளுமன்ற தேர்தல் மருதமுனைக்கான சந்தர்ப்பமாகவுள்ளது. ஏனைய கட்சிகளில் வெல்ல வேண்டும் என்றால் 45000 க்கும் மேற்பட்ட வாக்குகளை எடுக்க வேண்டும். ஆனால் எமது மயில் கட்சியில் 10,000 வாக்குகளை ஒரு வேட்பாளர் எடுப்பவர் இலகுவாக தெரிவாகலாம். இது உங்கள் ஊருக்கான சந்தர்ப்பமாகும். எனவே சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மருதமுனை மக்கள் ஒன்று திரண்டு ஒற்றுமையாக வாக்களித்தால் நீண்டகால அரசியல் அதிகாரம் எனும் வெற்றிடத்தை இலகுவாக நிரப்ப முடியும். இதில் முன்னாள் பிரதியமைச்சரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லாஹ் மஹ்றூப், முன்னாள் இராஜாங்க அமைச்சரும் கட்சியின் தவிசாளருமாகிய அமீர் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியில் மாற்று கட்சிகளில் நீண்ட காலமாக செயற்பட்டு வந்த பலர் வை.கே.ரஹ்மானுக்கு ஆதரவு வழங்குக கட்சியில் இணைந்து கொண்டனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top