உள்நாட்டு செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸ காலத்தில் பெருமளவு அபிவிருத்தி!!

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டமொன்று இன்று (31) மாவட்ட செயலகத்தில் தபால்சேவைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இங்கு கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ சுபீட்சத்தின்பால் நாட்டைகட்டியெழுப்ப வேகமாகவும் விவேகமாகவும் செயல்பட்டு வருகின்றார் ,

கொவிட் 19 வைரஸ் தாக்கம் வல்லரசு நாடுகளுக்கு பெரும் சவாலாக இருந்தபோதிலும் எமது நாட்டில் மிக இலகுவாக இதில் ஜனாதிபதி வெற்றிகண்டார் .எனவே பலம் பொருந்திய இன்றைய அரசின் மூலம் நாம் எமது மாவட்டத்தின் தேவைகளை நிறைவு செய்யவேண்டியுள்ளது.

ஏனைய மாவட்டங்களைவிட ஒருபடி முன்னேறி எமது மாவட்டமக்களுக்கு பணியாற்றவேண்டியுள்ளது இதற்கு இம்மாவட்ட அரசசேவை அதிகாரிகள் பூரண ஒத்துழைப்பினை வழங்க முன்வரவேண்டும் .

இன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அன்று ஜனாதிபதியாக ஆட்சி செய்கையில் இந்த நாட்டில் பெருமளவு வீதி ,பாலங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது மூன்று மாதத்துக்கான தற்காலிக வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதனூடாக நாம் எமது மாவட்டத் தில் பல அபிவிருத்திகளை செய்து கொள்ள வாய்ப்புக் கிட்டுமென தெரிவித்தார்,

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி .கலாமதி பத்மராஜா, மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் , திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, காணிப்பிரிவு,மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன் உட்பட பிரதேச செயலாளர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top