உள்நாட்டு செய்திகள்

மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டாம்

மல்வத்துபீடம் வலியுறுத்துகிறது
மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டாமென மிக முக்கிய பௌத்த பீடங்களில் ஒன்றான மல்வத்துபீடம் வலியுறுத்தியுள்ளது. மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் திம்புல்கும்புரே விமலதர்ம தேரர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், மாகாணசபை என்பது வெள்ளை யானை. அதனிடம் வேலை வாங்கமுடியாது. மாறாக உணவுகளை மாத்திரமே வழங்கிக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறானதொரு நிலைமை எமது நாட்டுக்கு தேவையில்லை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று கிராம பகுதிகளுக்கு நேரில் சென்று மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி வருகின்றார். எனவே, மாகாண சபைகள் வேண்டாம். அதற்கான தேர்தலை நடத்த வேண்டாமென மகாநாயக்க தேரர்களின் சார்பில் கோரிக்கை விடுக்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார். நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடக்கு மாகாண பிராந்திய அலுவலக அதிகாரி ஒருவர் குற்ற புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையின் வடக்கு மாகாண பிராந்திய அலுவலகத்தில் பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாவட்ட ரீதியில் அறுவடை செய்யப்படும் நெல்லினை அவ்வந்த மாவட்டங்களில் உள்ள அரிசி ஆலைகளிற்கு வழங்கி அரிசியாக சதோச உள்ளிட்ட நிறுவனங்களிற்கு விற்பனை செய்யும் நடைமுறை காணப்படும் நிலையில் கிலோ ஒன்றுக்கு 3 ரூபா பணத்தினை தரகர் கூலியாக பெற்று (லஞ்சமாக) வெளி மாவட்ட அரிசி ஆலைகளிற்கு விற்பனை செய்வதாக அமைச்சருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்யுமாறு அமைச்சரினால் தகவல் வழங்கப்பட்ட நிலையில், நேற்று கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட குற்ற புலனாய்வு பிரிவினர் விசேட சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர். இதன்போது மேலதிகமாக பெருந்தொகை பணம் காணப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top