உள்நாட்டு செய்திகள்

மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக உயிர் பிரிந்த குரங்குக் குட்டி – மக்கள் வேண்டுகோள்

வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் முன்பாகவுள்ள மின்சார கம்பியில் சிக்குண்டு குரங்கு குட்டி ஒன்று உயிழந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை பிரதேசத்தில் சில மாதங்களாக குரங்குகளில் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. இதனால் பிரதேசத்தில் காணப்படும் பயன்தரும் மரங்கள் மற்றும் வீட்டு கூரைகள் என்பவற்றை சேதப்படுத்தி வருகின்றது. இவை தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதுடன், சில சொத்துக்களும் சேதமாக்கப்பட்டு வருவதை மக்கள் தொடர்ச்சியாக அனுபவித்து வருகின்றனர். குறித்த பகுதியில் மழை ஓய்ந்துள்ளதால் குரங்குகளின் வருகை மீண்டும் தொடங்கிய நிலையில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்பட்டு வருகின்றது. இன்று வெள்ளிக்கிழமை குரங்கு குட்டி மரத்தில் இருந்து பாயும் போது மின்சார கம்பியில் சிக்குண்டு உயிரிழந்து காணப்படுகின்றது. எனவே வாழைச்சேனை பிரதேசத்தில் தொடர்ச்சியாக குரங்குகளில் வருகை இடம்பெற்று வருவதால் மக்களின் பாதுகாப்பு கருதியும், குரங்குகளின் உயிரை பாதுகாக்கும் வகையிலும் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top