ந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் கொரோனா பீதிக்கு மத்தியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு திட்டமிட்டபடி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 2,879 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 8.5 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்களின் உடல் வெப்பம், தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதிக்கப்படுகிறது. அனைவருக்கும் சானிடைசர் திரவம் வழங்கப்படுகிறது. அனைத்து மாணவர்களும் முகக்கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு படித்து வரும் மாற்றுத்திறனாளி மாணவியான சிந்தூரி தனது அவயங்களை இழந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு மாணவ மாணவிகளுக்கு தானே தயாரித்த முகக் கவசங்களை இலவசமாக வழங்கி வருகிறார். மாணவியின் இந்த செயலுக்கு மாநில முதல்வர் எடியூரப்பா உட்பட பலர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
