உலகம்

முதலிடம் பிடித்தார் அதிபர் ட்ரம்ப் – பின்னிலையில் ஜோ பைடன்

2020 ஆம் ஆண்டு டுவிட்டரில் மக்களால் அதிகம் பேசப்பட்ட நபர்களின் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முதிலடம் பிடித்துள்ளார். டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் குறித்த விடயம் பகிரப்பட்டுள்ளது. இவரைத் தொடர்ந்து அமெரிக்க அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். அதேபோன்று மூன்றாவதாக அமெரிக்க – கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ப்ளாய்டின் கொலை குறித்து அதிகம் ட்வீட் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை – டுவிட்டரில் மக்களால் அதிகம் பேசப்பட்ட நபர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி 7 ஆம் இடத்தையும், அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் 10 ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு மக்கள் பயன்படுத்தும் மிகவும் பிரபலமான ஹேஷ்டெக்காக #COVID19 இருந்துள்ளது. இந்த ஹேஷ்டேக் 40 கோடி முறை ட்வீட் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டும்மல்லாமல், உலகின் பெரும்பகுதி மக்கள் வீட்டிலேயே அதிகமாக இருந்ததால் மற்றும் இருப்பதால் #Stay Home என்ற ஹேஷ்டெக் 3 வது இடத்தை பிடித்துள்ளது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top