உள்நாட்டு செய்திகள்

21 ஆம் நூற்றாண்டின் சிறந்த வீரர் – முரளிக்கு ஜனாதிபதி வாழ்த்து

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 21ஆம் நூற்றாண்டின் மிக மதிப்புமிக்க வீரராக பெயரிடப்பட்டுள்ளார். விஸ்டன் கிரிக்கெட் மாதாந்த சஞ்சிகை, உலகின் முன்னணி கிரிக்கெட் பகுப்பாய்வு நிறுவனமான கிரிக்விஸ்சுடன் இணைந்து 21ஆம் நூற்றாண்டின் 30 முன்னணி டெஸ்ட் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் முரளிதரன் முதலிடத்தை பிடித்துள்ளார். இது குறித்து விஸ்டன் கிரிக்கெட் சஞ்சிகையின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் சாம் ஸ்டோவ் கூறுகையில், “நாம் 2000ஆம் ஆண்டில் இருந்த தரவுகளை சேகரித்தோம். எனவே இது 2000-2020 ஆம் ஆண்டுகளுக்கானதாக அமையும். முரளியின் மொத்தம் 800 டெஸ்ட் விக்கெட்டுகளில் 2000 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரை அவர் 85 போட்டிகளில் 573 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தக் காலப் பிரிவில் அவரை விடவும் முன்னிலையில் இருக்கும் ஒரே ஒருவர் ஜேம்ஸ் என்டர்ஸன் ஆவார். அவர் (2000-2020) 151 போட்டிகளில் 584 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்’ என கூறினார். கடந்த 1992ஆம் ஆண்டு அவுஸ்ரேலியா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியிறல் அறிமுகமான முத்தையா முரளிதரன், 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 800 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். குறிப்பாக, இந்த ஆய்வுக்கு உட்பட்ட 2000 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் அவர் ஓய்வுபெற்ற 2010ஆம் ஆண்டு வரையான காலத்தில் அவரது பந்துவீச்சு சராசரி 20.92 என்பதோடு 5 விக்கெட்டுகளை 50 தடவைகள் வீழ்த்தியுள்ளார். 2000ஆம் ஆண்டுக்கு பின்னர் அவர் விளையாடிய 84 போட்டிகளில் இலங்கை அணி 40 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதோடு 17 போட்டிகளை சமன் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top