உள்நாட்டு செய்திகள்

மேலும் 5 மரணங்கள் – இலங்கையில் கொரோனா மரணங்கள் 204 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தற்போது (31) அறிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்கனவே 199 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 4 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 204 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அறிவிக்கப்பட்டவர்களில் இருவர் இன்றும் (31) ஒருவர் கடந்த திங்கட்கிழமையும் (28) ஏனைய இருவரும் நேற்றும் (30) மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

200ஆவது மரணம்
தர்கா நகர் பிரதேசத்தைச் சேர்ந்த, 72 வயதான ஆண் ஒருவர், களுத்துறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் கடந்த திங்கட்கிழமை (28) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், நீரிழிவு உக்கிரமடைந்தமையால் ஏற்பட்ட குருதி விசமடைவு மற்றும் கொவிட்-19 தொற்று, என அறிவிக்கப்பட்டுள்ளது.

201ஆவது மரணம்
ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதான ஆண் ஒருவர், அம்பன்பொல மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய தொற்று நோய் (IDH) வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (31) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா நிலையுடன் ஏற்பட்ட உக்கிர நுரையீரல் தொற்று, என அறிவிக்கப்பட்டுள்ளது.

202ஆவது மரணம்
கொழும்பு 05 (நாரஹேன்பிட்டி/ கிருலப்பனை) பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதான பெண் ஒருவர், கொத்தலாவல பாதுகாப்பு விஞ்ஞான பீட வைத்தியசாலையிலிருந்து, கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில், IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் இன்று (31) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், ஈரல் தொற்று மற்றும் கொவிட்-19 நியூமோனியா நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.

203ஆவது மரணம்
கலேவல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான ஆண் ஒருவர், கலேவல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (30) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்றுடன் சிக்கலான நீரிழிவு நோய் நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.

204 ஆவது மரணம்
பெல்மதுளை பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதான ஆண் ஒருவர், இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (30) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று, குருதி விசமடைவு மற்றும் நுரையீரல் தொற்று, என அறிவிக்கப்பட்டுள்ளது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top