உலகம்

இந்தியாவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 80 இலட்சத்தை கடந்தது!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக இறங்கு முகத்தில் செல்கிறது. இருப்பினும் மொத்த பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 80 இலட்சத்தை நெருங்கியுள்ளது.

அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 45 ஆயிரத்து 158 பேர் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 79  இலட்சத்து 9 ஆயிரத்து 50 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 463 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 19 ஆயிரத்தை கடந்துள்ளது. குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 71 இலட்சத்து 33 ஆயிரத்தை கடந்துள்ளதுடன் 6 இலட்சத்து 56 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top