உலகம்

மொரீஷியஸ் நாட்டின் மக்கள் தங்களது தலைமுடியை வெட்டி எண்ணெய் கசிவைத் தடுக்கிறார்கள்.

நமது கிழக்கு கடற்கரை தற்போது வரலாற்றில் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது. 200,000 மெற்றிக் தொன்களுக்கு அதிகமான எண்ணெய் கடலோர நீரில் கலக்கும் சந்தர்ப்பத்தில் கடல், சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஏற்படும் சேதத்தை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இருக்கும். இரண்டு மாதங்களுக்கு முன்பு இதுபோன்ற ஜப்பானிய எண்ணெய் டேங்கர் மொரீஷியஸ் தீவுகளில் அருகே மூழ்கியதில் மொரிஷியஸ் கடற்கரையில் 1000-4000 தொன் எண்ணெய் வெளியேறியது. வளர்ந்த நாடுகளைப் போல அந்த எண்ணெயை உறிஞ்சும் தொழில்நுட்பம் அவர்களிடம் இல்லாததால் கடல் நீரிலிருந்து எண்ணெயைப் பிரிக்க உள்ளூர் முறைகளைப் பயன்படுத்தினார்கள்.

இங்கையில்

மனித தலைமுடி (இது அதிக எண்ணெயை உறிஞ்சுகிறது), வைக்கோல் மற்றும் கரும்பு இழைகள், மீன் வலைகளில் வைக்கப்பட்டு கடல் மேற்பரப்பில் எண்ணெய் பரவுவதைத் தடுக்கவும், எண்ணெயை உறிஞ்சவும் நீண்ட கடற்பாசிகளையும் பயன்படுத்தினார்கள்.
அதனோடு மொரிஷியஸ் மீனவர்கள் தங்களது தலைமுடியை வெட்டி அதன்மூலம் இதற்கு பங்களித்தனர். ஏனென்றால் அவர்களின் முடியை விடவும் அவர்களது பிரதான மீன்பிடி தொழில் அவர்களுக்கு முக்கியம். இருப்பினும் இரண்டு மாதங்கள் கடந்தும் பிறகும் இன்னும் எண்ணெய் கசிவின் விளைவுகள் மொரீஷியஸ் கடற்கரையில் இருந்து ஓயவில்லை. தற்போது அந்த நாடு ஜப்பானிய கம்பனியிடம் 34 மில்லியன் டொலர் பணத்தை இழப்பீடு தொகையாக கோரியுள்ளது.

மொரீஷியஸில்

நமது கிழக்கு கடற்கரையில் எரியும் பனாமா நாட்டிற்கு சொந்தமான இந்திய எண்ணெய் டேங்கரில் மொரீஷியஸ் சம்பவத்தை விடவும் 50 மடங்கு அதிகமான எண்ணெய் உள்ளது. இன்னும் தீயினை கட்டுபடுத்த முடியவில்லை அப்படி பாரிய அனர்த்தம் நிகழும் சந்தர்ப்பத்தில் அந்த தாக்கம் கிழக்கு,வடக்கு, தென் பகுதி கடலில் பரவும். எண்ணெய் கரைக்கு வருவதற்கு முன்பு கரைக்குச் சென்று இந்த மோசமான நிலையை எதிர்நோக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.

மொரீஷியஸில்

ருவன் விஜேமன்னே(சிங்களத்தில்)
பாறுக் நஜீ (தமிழ்)

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top