உள்நாட்டு செய்திகள்

யாழில் மினி சூறாவளி! 40 குடும்பங்கள் இடம்பெயர்வு

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை ஆதிகோயிலுக்கு அண்மித்த பகுதியில் வீசிய மினி சூறாவளியால் 40 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்று இரவு இடம்பெயர்ந்துள்ளன. திடீரென வீசிய கடும் காற்றினால் வீடுகள் பல சேதமடைந்ததுடன், மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் அனர்த்தம் காரணமாக வீடொன்றின் கூரை வீழ்ந்து ஏற்பட்ட பாதிப்பில் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, வீடுகளில் பாதிப்பு ஏற்பட்டதால் இடம்பெயர்ந்த மக்கள் அந்தப் பகுதிகளில் உள்ள தனியார் மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top