உள்நாட்டு செய்திகள்

யாழில் முகக்கவசத்தை நாடியில் அணிந்து சென்றவர்களுக்கு ஏற்பட்ட நிலை

கொரோனா தொற்று பரம்பல் அதிகரித்து வரும் நிலையில், யாழில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் மற்றும் நாடியில் முகக்கவசத்தை அணிந்து நடமாடிய 9 பேருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் தண்டம் விதிக்கப்பட்டது. தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய வகையில் நடமாடினார்கள் என குற்றஞ்சாட்டி சாவகச்சேரி பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலேயே இத் தண்டம் விதிக்கப்பட்டது. இதேவேளை முகக்கவசம் அணியாதோருக்கு 10,000 வரை தண்டப்பணம் அத்துடன் 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top