உள்நாட்டு செய்திகள்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய கடலோரக் காவல்படையால் கைது!

இலங்கையின் வடக்கு பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் இந்திய கடலோரகக் காவல்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள், மீன் பிடிக்கச் சென்ற படகின் வெளி இணைப்பு இயந்திரம் பழுதடைந்த நிலையில் திசைமாறி இந்தியாவின் புஸ்பவனம் கடற்பகுதிக்குச் சென்றிருந்த நிலையில் அவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கைதாகியுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மூவரிடமும் கடலோர காவல்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவரும் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பபட்டுள்ளது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top