உலகம்

யாழ்ப்பாணத் தமிழருக்கு போடப்பட்டது கொரோனா தடுப்பூசி

இங்கிலாந்தின் சர்ரேயில் உள்ள பிரீம்லி பார்க் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவ நிபுணர் பிரேம் பிரேமச்சந்திரன், கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட முதல் இலங்கையர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கடந்த 08 ஆம் திகதி காலை 8 மணிக்கு இவர் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.இவர் பணியாற்றும் மருத்துவமனையில் தடுப்பூசி போட்ட முதல் நபரும் இவர்தான்.

யாழ்ப்பாணத்தில் பிறந்த டாக்டர் பிரேம் பிரேமச்சந்திரன் இங்கிலாந்தில் 24 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இது தொடர்பாக பிபிசி சிங்கள சேவைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: “இது ஒரு காய்ச்சல் தடுப்பூசி போன்றது. நான் எந்த மாற்றத்தையும் உணரவில்லை. இதுவரை பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. நான் இன்று வேலைக்குச் சென்றேன்.” எனத் தெரிவித்துள்ளார். “இது முதல் தடுப்பூசி என்பதால் விளைவு என்னவாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.” இது போன்ற தடுப்பூசியை முதன்முதலில் பெறுவது எவ்வளவு பாதுகாப்பானது என்று கேட்டதற்கு, நிபுணர் டாக்டர் பிரேம் பிரேமச்சந்திரன், இது பல பரிசோதனைகளுக்குப் பிறகு முறையாக உருவாக்கப்பட்ட தடுப்பூசி என்று கூறினார். இதுவரை எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top