உள்நாட்டு செய்திகள்

யாழ். பல்கலைக்கழகத்தில் மீள நினைவுதூபி அமைக்க துணைவேந்தர் திடீர் அனுமதி – அடிக்கல்லும் இட்டார்! கிடைத்தது வெற்றி

யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை இந்த முடிவு எட்டப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். மாணவர்கள் முன்னெடுத்திருந்த போராட்டக்களத்திற்கு இன்று காலை பல்கலைக்கழக துணைவேந்தர் வருகை தந்திருந்தார்.

இதன்போது மீண்டும் நினைவு தூபி அமைக்க ஆவண செய்வதாக உறுதியளித்திருந்தார். அத்துடன் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு இருந்த குறித்த இடத்திற்கு மாணவர்களை அழைத்துச் சென்று பார்வையிட்டிருந்தார். அத்துடன் முள்ளிவாய்கால் நினைவு தூபி இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீளவும் அதை கட்டப்படுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதன்மூலம் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top