உள்நாட்டு செய்திகள்

லங்கா பிரீமியர் லீக் போட்டி! கடும் வாக்குவாத்தில் ஈடுபட்ட வீரர்களின் வீடியோ காட்சி

இலங்கையில் கண்டி டஸ்கர்ஸ் மற்றும் காலி கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி முடிவின் போது, வீரர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் போன்று, இலங்கையில், தற்போது Lanka Premier League (LPL) போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று குசால் பெரேரா தலைமையிலான kandy tuskers அணியும், சயீத் அப்ரிடி தலைமையிலான galle gladiators அணிகள் மோதின.

இப்போட்டியில், kandy tuskers அணி 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் போட்டியின் 18-வது ஓவரை கண்டி டஸ்கர்ஸ் அணி சார்பில் Naveen-ul-Haq-வீசிய போது அந்த ஓவரில் கல்லி அணியை சேர்ந்த Mohammad Amir பவுண்டரி விளாசினார். அப்போதே இருவருக்கும் ஒரு வாக்குவாதம் போன்று காணப்பட்டது. அதன் பின் kandy tuskers அணி 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இருப்பினும் போட்டிக்கு பின்னர் Naveen-ul-Haq மற்றும் Mohammad Amir கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த Naveen-ul-Haq ஒரு சீனியர் வீரரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை என இணையவாசிகள் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி கல்லி அணியைச் சேர்ந்த கேப்டன் போட்டி முடிவின் கை குலுக்கனின் போது Naveen-ul-Haq ஒரு மாதிர் முறைப்பது போன்று எச்சரித்தார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top