லெபனான் தலைநகர் நேற்றிரவு இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78 ஆக உயரவடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
மேலும் 4 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இந்த வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
6 ஆண்டுகளுக்கும் மேலாக களஞ்சியசாலை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 750 டன்களுக்கும் அதிகளவான அம்மோனியம் நைட்ரேட் வெடிப்பொருட்களினால் குறித்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக லெபனான் தெரிவித்துள்ளது
இருப்பினும் பாதுகாப்பற்ற முறையில் குறித்த 2 ஆயிரத்து 750 டன்களுக்கும் அதிகளவான அம்மோனியம் நைட்ரேட் வெடிப்பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளமை ஏற்றுகொள்ள முடியாது என்று லெபனான் நாட்டு ஜனாதிபதி மைக்கல் ஔன் தனது உத்தியோக பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
இதேவேளை 2005 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் ரஃபிக் ஹரிரி கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு வௌியாகவுள்ள நிலையில் இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளமை பதட்ட நிலையை ஏற்படுத்தியுள்ளதாக லெபனான் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும் குறித்த வெடிப்பிற்கான காரணம் இதுவரை வௌியாகாத நிலையில் அது தொடர்பில் காரணத்தை கண்டறிவதற்கான விசாரணைகள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளன
மேலும் குறித்த வெடிப்பு சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் அதிகபட்ச தண்டனையை” எதிர்கொள்ள நேரிடும் என்று லெபனான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
