வெள்ளவத்தையில் அமைந்துள்ள தனியார் வங்கியில் பணியாற்றிய இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் குறித்த அதிகாரிகளின் தாய்மார்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பிலியந்தல சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கனேமுல்ல பகுதியில் உள்ள வங்கி கிளையில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் வெள்ளவத்தையில் அமைந்துள்ள வங்கி கிளைக்கு அண்மையில் வந்து சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. இதனை அடுத்து வெள்ளவத்தை கிளையில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் போதே, குறித்த இரு அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. குறித்த நபர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
