ஆன்மீகம்

வரலாற்று சிறப்பு மிக்க முன்னேஸ்வரம் காளியம்மன் ஆலயத்தின் சிலை மாயம்

சிலாபம் – முன்னேஸ்வரம் குருணாகல் வீதியிலமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க மயான காளியம்மன் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான பஞ்சலோக எழுந்தருளி விக்கிரகம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் 3 நாட்கள் கடந்த போதும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, ஆலயத்தின் உரிமை சம்பந்தமாக இரண்டு தரப்பினருக்கிடையிலிருந்து வரும் தகராறு காரணமாக தொடரப்பட்டுள்ள வழக்கு சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. ஒரு தரப்பினர் ஆலயத்திற்குள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். கொள்ளையிடப்பட்ட சிலை ஆலய மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தாகவும் முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் இவ்வாறு சிலையொன்றும் திருப்பட்டிருந்தது எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top