உள்நாட்டு செய்திகள்

வவுனியாவில் சற்றுமுன் பெண் ஒருவருக்கு கொரோனா!

வவுனியா, பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (16.11.2020)  உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். துபாயில் இருந்து வருகை தந்த நிலையில் வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வெலிகம பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் ஒருவர் சிறுநீரக நோய் காரணமாக கடந்த வியாழக்கிழமை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். குறித்த பெண்ணிற்கு கொரோனா நோய் அறிகுறி தென்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்படடு சிகிச்சை வழங்கப்பட்டதுடன், இன்று (16.11.2020) PCR பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top