உள்நாட்டு செய்திகள்

வாக்கினை பதிவு செய்த அனைவருக்கும் நன்றி 2/3 பெரும்பான்மை உருவாக்கப்படும் – மஹிந்த

தமது வாக்கினை பதிவு செய்வதற்காக கொவிட் 19 தொற்று பரவலுக்கு மத்தியிலும் வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு வருகை தந்த அனைத்து வாக்காளர்களுக்கும் விசேடமாக தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் ஆளும்கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று வெற்றிபெறும் இல்லையென்றால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கான ஏற்பாடுகச் செய்வோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை கொண்ட நாடாளுமன்றத்தின் தேவை உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

பொருளாதார சவால்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்த பிரதமர், இவற்றை விடவும் கடுமையான சவால்களை தாங்கள் ஏற்கனவே எதிர்கொண்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் சுகாதார வழிகாட்டுதல்களின்படி பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான மக்கள் ஆர்வத்தைபாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு 6.9 மில்லியன் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஜனாதிபதியின் திட்டம் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து செயற்படுத்தப்படும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top