தொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் கஸ்டம் வால்பேப்பர் அம்சம் அறிமுகம்

வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்களை வழங்கும் அப்டேட் வெளியிடப்பட்டு இருக்கிறது. புதிய அப்டேட் வாட்ஸ்அப்பில் கஸ்டம் வால்பேப்பர், ஸ்டிக்கர், எமோஜி என பல்வேறு வசதிகளை வழங்குகிறது. அதன்படி பயனர்கள் வால்பேப்பர் கேலரியில் இருக்கும் படங்களை வெவ்வேறு சாட்களில் வால்பேப்பராக செட் செய்து கொள்ளலாம். இத்துடன் தற்போதைய டூடுள் வால்பேப்பர்களின் நிறமும் புது அப்டேட்டில் மாற்றப்பட்டு இருக்கிறது. வால்பேப்பர் சார்ந்த மாற்றங்கள் மட்டுமின்றி ஸ்டிக்கர்களை டெக்ஸ்ட் மற்றும் எமோஜி மூலம் தேடும் வசதியும் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வாட்ஸ்அப் உலக சுகாதார மையத்தின் Together at Home ஸ்டிக்கர் பேக் ஒன்றை செயலியில் வழங்கி உள்ளது. இந்த ஸ்டிக்கர் பேக் பயனர்களை கொரோனாவைரஸ் பரவல் காலக்கட்டத்தில் வீட்டினுள் இருக்க வலியுறுத்தும் ஸ்டிக்கர்களை கொண்டிருக்கிறது. இத்துடன் கஸ்டம் வால்பேப்பர் அம்சம் வழங்கப்பட்டு உள்ளது. இதை கொண்டு ஒவ்வொரு சாட்களுக்கும் பிரத்யேக வால்பேப்பர்களை செட் செய்து கொள்ள வழி செய்கிறது.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Copyright © Tamiltv.lk

To Top