தொழில்நுட்பம்

வாட்ஸ்அப் வெப் வெர்ஷனில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதி அறிமுகம்

வாட்ஸ்அப் வெப் பயனர்களுக்கு வாய்ஸ் மற்றும் வீடியோ கால் வசதி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பயனர்கள் டெஸ்க்டாப் மூலமாக வாட்ஸ்அப் அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதுவரை வாட்ஸ்அப் கால் வசதி மொபைல் சாதனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி வாட்ஸ்அப் அழைப்புகள் டெஸ்க்டாப் வெர்ஷனிலும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. தற்சமயம் இந்த அம்சம் பீட்டா பதிப்பில் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம். வாட்ஸ்அப் வெப் தளத்தில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் சேவை வழங்கப்பட்டாலும், முதற்கட்டமாக இது தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதே அம்சம் பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படுகிறது. அந்த வகையில், இந்த அம்சம் செயலியின் ஸ்டேபில் வெர்ஷனுக்கு விரைவில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கலாம்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top