உள்நாட்டு செய்திகள்

வாழைச்சேனையில் மூன்று நாட்களில் 37 பேருக்கு டெங்கு!

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த ண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இன்று 03ம் திகதி வரை 37 பேர் டெங்குநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார். இதனையடுத்து வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்படுகின்ற இடங்களை அடையாளப்படுத்தி மக்களுக்கு தெளிவூட்டும் நடவடிக்கையும், வீட்டு வளாகம் பரிசோதனை செய்யும் நடவடிக்கையும், தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று புதுக்குடியிருப்பு கிராம சேவை அதிகாரி பிரிவில் டெங்கு நுளம்பு பெருகுவதற்கு வசதியாக இடங்களை சுத்தம் இல்லாமல் வைத்திருந்த நான்கு பேருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

Www.tamiltv.lk
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரபலமான செய்திகள்

உலக தமிழர்களின் உண்மைக் குரல் www.tamiltv.lk

Facebook

Copyright © Tamiltv.lk

To Top